தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை


தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை
x

தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

சிறுமி பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் கலியன் என்ற கருணாநிதி(வயது 54). கூலி தொழிலாளி. இவர் கடந்த 16.7.2022 அன்று 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து 2 மாதம் அந்த சிறுமியை பலாத்காரம் செய்த அவர், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதையறிந்த சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கலியனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ராஜா வாதாடினார்.

வாழ்நாள் சிறை தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் தீர்ப்பு கூறினார். அதில், கலியன் என்ற கருணாநிதிக்கு எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து கலியனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.


Next Story