தொழிலாளிக்கு கத்திக்குத்து; வாலிபர் சிக்கினார்


தொழிலாளிக்கு கத்திக்குத்து; வாலிபர் சிக்கினார்
x

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் சிக்கினார்.

மதுரை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் புலிபாண்டியன் முதல் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள இடியாப்பம் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்த போது வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் கத்தியை காட்டி பாலமுருகனை மிரட்டி பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி விட்டார். இது குறித்து பாலமுருகன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பொன்மேனி முதல் தெருவை சேர்ந்த ரமேஷ் (21) என்பவரை கைது செய்தனர்.


Next Story