தொழிலாளி தற்கொலை
போடியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி
போடி குலசேகர பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிேசாதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story