தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

சத்திரப்பட்டி கிராம நிர்வாகம் அலுவலகம் அருகே உள்ள மரத்தில் தூக்கில் ஒருவர் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் ஒக்கூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேவகமூர்த்தி (வயது 55) என்று தெரியவந்தது. அவருடைய மனைவி செல்வி (50) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் விரக்தி அடைந்த சேவகமூர்த்தி, கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி சத்திரப்பட்டி வந்துள்ளார். பின்னர் அங்குள்ள மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story