தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் அரசு காலனி பகுதிக்குட்பட்ட காந்தி நகரை சேர்ந்தவர் அகமது கபீர் (வயது 48). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பாத்திமா பேபி (36) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அகமது கபீர் செலவுக்காக வெளியில் கடனுக்கு பணம் வாங்கி உள்ளார். இந்நிலையில் சரியான வேலை ஏதும் இல்லாததால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அகமது கபீர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாத்திமா பேபி கொடுத்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.