தொழிலாளி தற்கொலை
நெல்லை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே செங்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை முத்துகிருஷ்ணனின் மனைவி கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த அவர் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story