வில்லுக்குறி அருகேதூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


வில்லுக்குறி அருகேதூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

வில்லுக்குறி அருகேதூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,:

வில்லுக்குறி அருகே காரவிளையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). வெல்டிங் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கொரோனா சூழ்நிலையில் கண்ணன் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடன் வாங்கி நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டு உத்திரத்தில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

---


Next Story