தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை
கன்னியாகுமரி
கருங்கல்:
கருங்கல் அருகே ஆலஞ்சி பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜேந்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவத்தன்றும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் நட்சத்திரம் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story