தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி கீழமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவரது மனைவி வள்ளி.

கண்ணன் மதுக்குடித்துவிட்டு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story