ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்த தொழிலாளர்கள்
ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்துக்கு தொழிலாளர்கள் திரண்டு வந்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களில் சிலர் திரண்டு நேற்று மாலை இரூரில் உள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் அங்குள்ள அலுவலர்களிடம் தாங்கள் செய்த 100 நாள் வேலையில் சில நாட்களுக்கு ஊதியம் ஏறவில்லை. அந்த ஊதியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அந்த ஊதியம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story