வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்த தொழிலாளர்கள்


வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்த தொழிலாளர்கள்
x

சரியானபடி கூலி வழங்கவில்லை எனக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் திரண்டு வந்தனர்.

வேலூர்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், சீவூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த சில நாட்களாக சரியான படி கூலி வழங்கவில்லை எனவும், என்.எம்.எம். ஆப் மூலம் வருகை பதிவு செய்தும் தங்களுக்கு கூலி வரவில்லை என தெரிவித்தும் 50-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் நேற்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அவர்களிடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.தமிழ்வாணன், சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் 100 நாள் வேலை திட்டத்தில் என்.எம். எம்.ஆப் வருகை பதிவேட்டில் சரியானபடி பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கூலி வருவதாகவும், இந்த பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story