கோவில்பட்டியில்தொழிலாளர் விடுதலை முன்னணி முப்பெரும் விழா


கோவில்பட்டியில்தொழிலாளர் விடுதலை முன்னணி முப்பெரும் விழா
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில்தொழிலாளர் விடுதலை முன்னணி முப்பெரும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டியில் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றுதல், மண்டல மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பாராட்டு, திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டு விளக்க பரப்புரை ஆகிய முப்பெரும் விழா நடந்தது. தாமஸ்நகர் அம்பேத்கர் மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு தொழிலாளர் விடுதலை முன்னணி ஈஸ்வரவளவன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் மல்லிகாசின்னதுரை, செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரேம்குமார், சிவசாமி வரவேற்புரை வழங்கினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைப் பொதுச் செயலாளர் விமல் வங்காளியர் பெயர் பலகையை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் முருகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் சிறப்புரையாற்றினர். இதில் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் பிரிவு தலைவர் மாணிக்கராஜ், தமிழ் புலிகள் கட்சி வழக்கறிஞர் பீமாராவ், ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் அழகுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன நன்றி கூறினார்.


Next Story