துப்பாக்கி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


துப்பாக்கி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

துப்பாக்கி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை, முன்பு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது. தற்போது இந்த தொழிற்சாலை கார்ப்பரேட் நிர்வாகமாக மாற்றப்பட்டு ஓராண்டு நிறைவுபெறுகிறது. இதையொட்டி பி.எம்.எஸ். சங்கம் சார்பில் நிர்வாகிகள் அருள் சேவியர், பாஸ்கரன், எம்பிளாயிஸ் யூனியன் நிர்வாகிகள் ஜெயபால் சீனிவாசலு, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் வேதநாயகம், சுரேஷ் ஆகியோர் தலைமையில் துப்பாக்கி தொழிற்சாலை மெயின்கேட் முன்பு தொழிலாளர்கள் கருப்பு சட்டை அணிந்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு கார்ப்பரேட் முடிவை திரும்பப்பெற வேண்டும். படைக்கல தொழிற்சாலைகளின் வளங்களை அழிக்கக்கூடாது. தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.மேலும் தொழிற்சங்கத்தினர் இது குறித்து கூறுகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 41 படைக்கல தொழிற்சாலைகளில் ராணுவத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைகளை மத்திய அரசு 7 யூனிட்களாக பிரித்து கார்ப்பரேஷனாக மாற்றிவிட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட உறுதிெமாழிகளை மத்திய அரசு செயல்படுத்தாமல் உள்ளது. இதில் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு போதிய ஆர்டர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கேள்விக்குறியாக உள்ளது, என்றனர்.


Next Story