காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
காட்டூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இரண்டு தனியார் துறைமுகங்கள் இயங்கி வருகிறது. இந்த துறைமுகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யக் கோருதல் ஊதிய உயர்வு மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும் காட்டும் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்வதை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம் நுழைவாயில் முன்பு மீஞ்சூர் பகுதி பொது தொழிலாளர் சங்கம் மற்றும் பழவேற்காடு தொழிலாளர் குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story