பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்


பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல் மேல்மலையனூரில் பரபரப்பு

விழுப்புரம்

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே மா. மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரித்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் முதல் குழுவில் 33 பேருக்கும், நேற்று மற்றொரு குழுவில் உள்ள 38 பேருக்கும் வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மண்வெட்டி, பாண்டு உள்ளிட்ட உபகரணங்களுடன் ஆத்திப்பட்டு-மானந்தல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவலறிந்து வந்த தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச் செல்வன் மற்றும் அவலூர்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரவேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக ஆத்திப்பட்டு-மானந்தல் இடையே சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story