ரூ.1¼ கோடியில் நிறைவு பெற்ற பணிகள்


ரூ.1¼ கோடியில் நிறைவு பெற்ற பணிகள்
x

ரூ.1¼ கோடியில் நிறைவு பெற்ற பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட அனந்தலை, வன்னிவேடு, வீ.சி. மோட்டூர், குடிமல்லூர் ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், மேல் நீர்த்தேக்க தொட்டி, பகுதி நேர ரேஷன் கடை தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் என ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story