சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக வான் கட்டுப்பாட்டாளர் தின கொண்டாட்டம்


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக வான் கட்டுப்பாட்டாளர் தின கொண்டாட்டம்
x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக வான் கட்டுப்பாட்டாளர் தின கொண்டாட்டம்: விமானங்களை கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்பங்கள் அமைக்க திட்டம்.

மீனம்பாக்கம்,

உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் சர்வதேச வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது

சென்னை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் வாயிலாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 450 விமான சேவைகள் கையாளப்படுகின்றன. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் செயற்கைகோள் வாயிலாக கடல் மேல் செல்லும் விமானங்களை கண்காணிப்பதற்கான நவீன தொழில் நுட்பங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதே போல தென் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் அடி முதல் 46 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் விமானங்களில் உள்ள விமானிகளுடன் தொடர்பு கொள்ள அதி உயர அலைவரிசை தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் 1500 விமானங்கள் கையாளப்படும். விமானங்கள் தடையில்லாமல் வானில் பறக்க, தரையிறங்க, ஓடுபாதைக்கு செல்ல, வானில் ஒரு விமானத்துடன் மற்றொரு விமானம் மோதாமல் இருக்க செய்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் பணி ஆகும். எந்தொரு பயணிக்கும் பாதிப்பு இல்லாமல் விமான பயணத்தை மேற்கொள்ள தரையில் இருந்து கையாளும் பணியை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story