உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அலுவலர்கள் குழு ஆய்வு
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அலுவலர்கள் குழு ஆய்வு நடத்தினர்.
திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள திருச்சி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உலக வங்கி அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிறுவனத்தால் தொடங்கப்பட்ட விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய பயன்படும் எண்ணெய் செக்குகள், கடலை உடைக்கும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரம் ஆகியவற்றின் பயன்பாடுகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் இந்நிறுவனத்தால் வாங்கப்பட்டு விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர், வைக்கோல் கட்டும் பேலர், நடவு எந்திரம் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடம் கலந்து பேசி விபரங்களை அறிந்து கொண்டனர். இந்த விழாவில் சென்னை வேளாண்மை துணை இயக்குனர் மீனாகுமாரி, திருச்சி துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சரவணன், தேசிய அக்ரோ நிறுவனத்தை சார்ந்த நேதாஜி மற்றும் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் மோகன் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) நாகேஷ்வரி நன்றி கூறினார்.