உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்


உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்
x

உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஜான்.கே.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் கே.ஆர்.டி. டி.வி.எஸ். கம்பெனி உரிமையாளர் ராஜன் தொடங்கி வைத்தார். பி.ஜி.ஆர். நகை மாளிகை உரிமையாளர் பி.ஜி.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலமானது திருச்சி சாலை, கடைவீதி, நான்கு ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட செவிலியர் மாணவிகள் சத்தான உணவு உட்கொள்வோம். முத்தான தாய்ப்பாலை அளிப்போம். குழந்தைக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுப்போம். தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோயை தவிர்க்கலாம். முதல் 3 நாட்களுக்கு சீம்பால் கொடுக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தை நாடி தாய்-சேய் நலத்தை காத்திடுவோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story