உலக மாற்றுத்திறனாளிகளின் தினம்


உலக மாற்றுத்திறனாளிகளின் தினம்
x

தேசூரில் உலக மாற்றுத்திறனாளிகளின் தின நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

தேசூரில் உலக மாற்றுத்திறனாளிகளின் தின நிகழ்ச்சி நடந்தது.

தேசூர் பேரூராட்சி பாடசாலை தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மாற்று திறனாளிகளின் பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். தெள்ளார் ஒன்றிய வட்டார வளமேற்பார்வையாளர் ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.

இதனையொட்டி மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வுக்காக விளையாட்டுப் போட்டி, ஓவியப்போட்டி, நாடகப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் கேக் வெட்டி மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் வழங்கினர்.இதில் சிறப்பு ஆசிரியர்கள் பச்சையப்பன், கோவிந்தராஜ், மோகனா கிரிஜா, பெற்றோர் கழக தலைவர் தலைவர் மகேஸ்வரி, இல்லம் தேடி ஆசிரியர்கள் திவ்யா, சிவரஞ்சனி, துர்கா மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.



Next Story