பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் சமூக நலப் பிரிவு மற்றும் மாணவ செவிலியர் சங்கம் இணைந்து காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக சுற்று சூழல் தினத்தை கொண்டாடின. விழாவில், கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வி வரவேற்று‌ பேசினார். இதில், சிறப்பு விருந்தினராக டாக்டர் மெர்வின் தேவதாசன் 'ஒரே ஒரு பூமி' என்ற மையக்கருத்தினையும், அதை காக்க பொதுமக்களுக்கான கடமைகள் குறித்தும் பேசினார். பின்னர் சுகாதார ஆய்வாளர் ஜெய்சங்கர் சுற்றுசூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு மிகப்பெரியது என்ற தலைப்பில் பேசினார்.

கல்லூரி உதவி பேராசிரியை சங்கீதா, பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், இயற்கை முறை மாற்றம், மாசுகட்டுப்பாடு குறித்து பேசினார். பின்னர் 3-ம் ஆண்டு மாணவிகளான முத்துமாரி, மகாலெட்சுமி ஆகியோர் சுற்றுச்சூழல் அதன் சமநிலை, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அதை தடுக்கும் முறைகள் பற்றிய கருத்துகளை கணினி மூலம் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். கல்லூரி களப்பயிற்சி ஆசிரியரான ரூபிணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி நன்றி கூறினார்.

பின்னர், முதலாமாண்டு மாணவிகள் திருச்செந்தூர் கடற்கரை பகுதியை தூய்மை செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தரம் வாய்ந்த கல்வி மற்றும் பாதுகாப்பான இருப்பிடத்துடன் கூடிய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டின் நிர்வாக இடத்திற்கு மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். 04639-220607, 04639-220608, 9994909422. மேலும் விபரங்களுக்கு drsacon@aei.edu.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை கல்லூரி செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story