உலக சுற்றுச் சூழல் தின உறுதிமொழி ஏற்பு
ஏலகிரி மலையில் உலக சுற்றுச் சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஏலகிரி மலையில் ஊராட்சி மன்றம் சார்பில் இயற்கை பூங்கா அருகில் உறுதிமொழி ஏற்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர். அதன் பிறகு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஏலகிரி மலை சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், தனியார் கல்லூரி மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
Related Tags :
Next Story