உலக பாரம்பரிய மரபு விழா
உலக பாரம்பரிய மரபு விழா
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உலக பாரம்பரிய மரபு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்திய தொல்லியியல் துறை இயக்குனர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு நடந்த புகைப்படக்கண்காட்சியை எம். எல்.ஏ. தொடங்கி வைத்து ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இதில் கும்பகோணம் அரசு கவின் கல்லூரி முதல்வர் அருளரசன், ஓய்வு பெற்ற தொல்லியியல் துறை அதிகாரிகள் வெங்கடேசன், ஹனுமானதப்பா தெலுங்கு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் உதவி தொல்லியியல் துறை ஆய்வாளர் முத்துக்குமார், பொறியாளர்கள் பரணிதரன், ராஜன், கலைச்செல்வன், பராமரிப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story