உலக மரபு விழா


உலக மரபு விழா
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் உலக மரபு விழா

விழுப்புரம்

விழுப்புரம்

உலக மரபு தினத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் உலக மரபு விழாவை கொண்டாடியது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கி அறநிலையத்துறை கோவில்கள் பராமரிப்பு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் கலந்துகொண்டு, தமிழக வரலாற்றையும் குறிப்பாக சோழர் வரலாறு, கலை வரலாறு, கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். இதனையடுத்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ், திருவாமாத்தூர் கோவில் வரலாறு, கல்வெட்டு செய்திகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி கோவில் கட்டிடக்கலை, கல்வெட்டுகளை படித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், தொல்லியல் ஆர்வலர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story