உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்பு
இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ். கல்லூரியில் உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக மலேரியா தினம் நிகழ்ச்சியை கல்லூரியில் நடத்தியது. இதற்கு டாக்டர் ஆர்.கே.எஸ். கலைக்கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரி உதவி பேராசிரியர் மேகலை வரவேற்றார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மலேரியா கொசுக்கள் எவ்வாறு உற்பத்தியாகிறது?, மலேரியா காய்ச்சல் ஏற்படுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதையடுத்து ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் மலேரியா குறித்த உறுதிமொழியை ஏற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் உதவி பேராசிரியர்கள் துர்காதேவி, பவுலின் சங்கீதா, லாவண்யா, லோகு, ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இதில், மேலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பாலா, தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் அகிலா நன்றி கூறினார்.