உலக தாய்மொழி தின விழா
உலக தாய்மொழி தின விழா
ஊட்டி
ஊட்டி ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் பாவேந்தர் இலக்கிய பேரவை, உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் உலக தாய் மொழி தின நிகழ்ச்சி நடந்தது. இதில் நீலகிரி மாவட்ட தமிழ் இயக்க நிர்வாகி ரமணா சுரேஷ் திருக்குறள் நாட்காட்டியை வெளியிட்டார். அதை ஒய்.எம்.சி.ஏ. செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயப்பிரகாஷ் பெற்று கொண்டார். நடன ஆசிரியை அன்புச்செல்வி, பாவேந்தர் பாரதிதாசன் பாடலை பாடினார். பள்ளி மாணவ-மாணவிகளின் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. புலவர் சோலூர் கணேசன், தமிழியக்க தொண்டர் மதிமாறன், ஊட்டி மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி, கவிஞர் நீலமலை ஜேபி, மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், கோர்ட்டுகளில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் கோத்தகிரி கவிஞர் நிர்மலா அன்னை மொழி தின கவிதை வாசித்தார். பாவேந்தர் இலக்கிய பேரவை தலைவர் ஜனார்தனன் நன்றி கூறினார்.