Normal
உலக புகையிலை ஒழிப்பு தினம்
அரசம்பட்டில் உலக புகையிலை ஒழிப்பு தினம்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு டாக்டர் ஆல்வின் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் வரவேற்றார். இதில் புகையிலையை உபயோகிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, இருமல், சளி, ஆஸ்துமா, செரிமான கோளாறு, மூளை பாதிப்பு, கண் பாதிப்பு, காசநோய், சிகரெட் புகைப்பதால் புற்றுநோய் அபாயம், ஆண் மலட்டுத்தன்மை, சுற்றுச்சூழல் கெடுதல் உள்ளிட்ட தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார செவிலியர் பரிமளா, கிராம சுகாதார செவிலியர்கள் சுமதி, சசிகலா, மீரா, மருந்தாளுநர் தெய்வசிகாமணி மற்றும் ஆஷா பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story