உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனம்   கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x

திருவாரூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

திருவாரூரில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை தினம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் கிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அலுவலர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் ஏற்றனர். மேலும் உலக மக்கள் தொகை தின பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:-

அர்ப்பணிப்பு

தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் முதன்மையானதாக உள்ளது. தாய், சேய் நலத்தை பாதுகாக்கவும், பெண் கல்வியினை மேன்மேலும் ஊக்குவிக்கவும் வேண்டும். குடும்ப நலத்திட்டங்களை மக்கள் இயக்கமாக மலர செய்ய விழிப்புணர்வு பணிகளில் முழுமையாக அர்ப்பணித்து கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர் மாணவிகள் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், நலப்பணிகள் இணை இயக்குனர் செல்வகுமார், குடும்ப நல துணை இயக்குனர் உமா, காசநோய் துணை இயக்குனர் புகழ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story