உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

திண்டுக்கல்லில் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து, பலூன்களை பறக்க விட்டார். துணை இயக்குனர் (குடும்ப நலம்) பூங்கோதை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வலம் வந்து நிறைவு பெற்றது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) அன்புச்செல்வன், துணை இயக்குனர் (காசநோய்) ராமச்சந்திரன், டாக்டர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் அரசு நர்சிங் கல்லூரி மற்றும் ஜி.டி.என். நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட மஞ்சள் பை வழங்கப்பட்டது.


Next Story