உலக ரட்சகர் ஆலய திருவிழா சப்பர பவனி


உலக ரட்சகர் ஆலய திருவிழா சப்பர பவனி
x

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா சப்பர பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் தினசரி காலையில் ஜெபமாலை, திருப்பலி, மாலையில் ஜெபமாலை மறையுரை, நற்கருணை ஆசீர், இரவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை பங்குபேரவை திருமணமாகாத ஆண்கள், வெளியூர்வாழ் பங்குமக்கள் சார்பில் ஜெபமாலை, திருப்பலி நடந்தது. மாலையில் திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் நடத்தினார். மறைமாவட்ட செயலாளர் ஜெகன் ராஜா மறையுரையாற்றினார். பின்பு ஆலயத்தை சுற்றி சப்பர பவனி நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று காலை திருவிழா திருப்பலியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மாலையில் திசையன்விளை நகர வீதிகளில் சப்பர ஊர்வலம் நடந்தது. இந்துக்கள் தங்கள் வீட்டு முன்பு கோலமிட்டு உப்பு, மிளகு, மாலை பழங்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். இது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இருந்தது.

விழாவில் தி.மு.க. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அனிதா பிரின்ஸ், திசையன்விளை பேரூராட்சி கவன்சிலர்கள் நடேஷ் அரவிந்த், எஸ்.எம்.டி.அலெக்ஸ், தர்மர் பழக்கடை எஸ்.எம்.தர்மர், சண்முகவேல் பர்னிச்சர் மணிகண்டன் முத்தாரம்மன் டிராவல்ஸ் பட்டுராஜா, ஸ்ரீராம் ஜோதிட நிலையம் தாசன், கீதா தங்க மாளிகை குணசேகரன், விஜேஷ்குமார் வக்கில் ஜெனிபர் தினகர், தங்கையா ஸ்விட்ஸ் கணேசன், முருகேசன், ஜி.பி.எம்.குமார் ஆகாஷ் ஸ்ரீமதி ஜீவல்லரி அரிகரசுதன் ஆர்.எம்.பி.எலக்ட்ரிக்கல்ஸ் ராஜ மிக்கேல், ஸ்டாலின் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணி டக்ளஸ் செய்திருந்தார்.


Next Story