கூடலூரில் உலக தையல் தின விழா


கூடலூரில் உலக தையல் தின விழா
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் உலக தையல் தின விழா கொண்டாடப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

தமிழ்நாடு தையல் கலைஞர் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் உலக தையல் தின விழா சிறப்பு நிகழ்ச்சி கூடலூர் வணிகர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் தாமஸ் கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கூடலூர் தையல் கலைஞர்கள் சங்க தலைவர் சத்யன் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மேத்யூ, செயலாளர் ஜோஸ், சேவாலயா நிர்வாகி பிரியதர்ஷினி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தையல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் தேவர் சோலை பகுதி செயலாளர் இபினு நன்றி கூறினார்.


Next Story