ஸ்ராவன சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஸ்ராவன சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Sept 2023 1:00 AM IST (Updated: 10 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ராவன சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஸ்ராவன சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெங்கட்ரமண சாமி கோவில்

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஸ்ராவன மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஓசூர், சூளகிரி பகுதி பெருமாள் கோவில்களில் ஸ்ராவன மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று 4-வது ஸ்ராவன சனிக்கிழமையையொட்டி ஓசூர் வெங்கடேஷ் நகர், அலசநத்தம் ஆகிய இடங்களில் உள்ள வெங்கட்ரமண சாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள குடிசெட்லு திம்மராய சாமி கோவில், சூளகிரி அருகே கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவில், சூளகிரி வரதராஜ சாமி கோவில், பஸ்தலபள்ளி அங்குசகிரி திம்மராய சாமி கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கோவில்களில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பேட்டராய சாமி கோவில்

தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராய சாமி கோவிலில் தெலுங்கு, கன்னட மக்களின் ஸ்ராவன மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தளியில் உள்ள பெருமாள் கோவிலில் ஸ்ராவன சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சாமி திருவீதி உலா நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story