எருமை மாடுகளை பலியிட்டு வழிபாடு
எருமை மாடுகளை பலியிட்டு வழிபாடு
சிவகங்கையை அடுத்துள்ள பழமலை நகரில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் ஆவணி மாதம் காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு எருதுகள், ஆடுகள் ஆகியவற்றை பலிகொடுத்து அதன் ரத்தத்தை சுவாமி மீது தெளித்தும், குடித்தும் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த விழா கடந்த 9-ந்தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் அங்குள்ள மைதானத்தில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு காளியம்மன், மாரியம்மன், மதுரைவீரன் ஆகியோரின் பாரம்பரிய சிலைகளை வைத்து ெதாடங்கப்பட்டது. 3-ம் நாள் திருவிழாவான நேற்று காளியின் குடில்களின் வாயில்களில் அமைக்கப்பட்ட பலிபீடத்தில் 14 எருதுகளை பலியிட்டு சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதேபோல் அம்மன் குடில்களுக்கு முன்புள்ள பீடத்தில் 134 ஆடுகளையும் பலியிட்டு வழிபட்டனர். இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த குறவ இன மக்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.