சேலத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு


சேலத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
x
தினத்தந்தி 23 Oct 2022 1:15 AM IST (Updated: 23 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

கே.எஸ்.அழகிரி பிறந்த நாளையொட்டி சேலத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

சேலம்


தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்த நாளையொட்டி சேலம் கோட்டை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. துணை மேயர் சாரதாதேவி தலைமையில் தங்கத்தேர் இழுத்து கோவிலை சுற்றி கட்சி நிர்வாகிகள் வலம் வந்தனர். கோவிலில் கே.எஸ்.அழகிரியின் பெயரில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் வசந்தம் சரவணன், பொது செயலாளர் தனசேகர், மாநில மகளிர் அணி தலைவி புஷ்பா, சிறுபான்மை பிரிவு தலைவர் சுப்பிரமணி, விவசாய அணி மாநில தலைவர் ஆரோக்கியராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் யுவராஜ், அரவிந்தன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story