கேதார கவுரி விரதத்தையொட்டி பெண்கள் வழிபாடு


கேதார கவுரி விரதத்தையொட்டி பெண்கள் வழிபாடு
x

கேதார கவுரி விரதத்தையொட்டி பெண்கள் வழிபாடு வழிபாடு நடத்தினர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

கேதார கவுரி விரதத்தையொட்டி பெண்கள் வழிபாடு வழிபாடு நடத்தினர்.

தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. லட்சுமியை வணங்கும் இந்த விரதத்தையொட்டி தேசூர், பெரணமல்லூர், சேத்துப்பட்டு தேவிகாபுரம் ஆகிய ஊர்களில் சுமங்கலி பெண்கள் கேதார கவுரி விரதம் இருந்தனர். தேசூரில் ஆதி கேசவ பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், ரேணுகாம்பாள் கோவில், சேத்துப்பட்டு பாஞ்சாலி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், வரத சஞ்சீவிராய பெருமாள் கோவில், சுயம்பு கரை ஈஸ்வரர் கோவில், இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவில், தேவிகாபுரம் பெரியநாயகி தாயார் கோவில், மடம் தாடக புரிஸ்வரர் ஆகிய கோவில்களில் அதிரசம், வடை பழ வகைகளுடன் பட்டுப் புடவை, மஞ்சள், நோன்புக்கயிறு, கயிறு பட்டு வேட்டி, வெற்றிலை பாக்கு, பூ பழம் ஆகியவற்றை கூடையில் கொண்டு வந்து கோவில் முன்பு வைத்து கோவிலை வலம் வந்து, கற்பூர தீபம் காண்பித்து வணங்கினர். பின்னர் வீட்டில் உள்ள அனைவருக்கும் நோன்பு கயிரை கட்டினர்.

ஆரணி நகரில் கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் கேதார கவுரி விரத சிறப்பு பூஜையினை பெண்கள் விரதம் இருந்து நோன்பு எடுத்தனர். இதே போல காமாட்சி அம்மன் கோவிலிலும், பாப்பாத்தி அம்மன் கோவிலிலும், கோதண்ட ராமர் கோவிலிலும், சீனிவாச பெருமாள் கோவிலிலும், அரியாத்தம்மன் கோவிலிலும், தச்சூர் சாலையில் உள் கோதண்டராமர் கோவிலிலும் கேதார கவுரி விரத நோன்பினையொட்டி பெண்கள் விரதம் இருந்து வழிபாடுகள் நடத்தி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவண்ணாமலையிலும் கேதார கவுரி விரதத்தை யொட்டி பெண்கள் பூஜை செய்தனர். இதனையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.


Next Story