நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு


நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு
x

நெல்லையில் நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 14 மையங்களில் காலை மற்றும் மாலைகளில் நடத்தப்படுகிறது. இதனை 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

சீதப்பற்பநல்லூர் சர்.சி.வி.ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, பழைய பேட்டை தென்காசி ரோட்டில் உள்ள நிவேதிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழைய பேட்டை காமராஜர் முனிசிபல் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை பொதிகை நகர் ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை திருச்செந்தூர் ரோடு அரசு சட்டக்கல்லூரி, நெல்லை எஸ்.என்.ஹைரோடு சாப்டர் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் நேதாஜி ரோடு அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி, தச்சநல்லூர் மதுரை ரோடு வேதிக் வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, பேட்டை சாஸ்திரி நகர் அவர் ஓன் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வுக்கு உரிய பணிகள் மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வின் நடவடிக்கைகளை பதிவு செய்ய 15 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story