சாலை ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு
சாலை ஆய்வாளர் பணிக்கு எழுத்து தேர்வு 7-ந் தேதி நடக்கிறது
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை தாலுகாக்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மேல்நிலைப்பள்ளி, ஏஞ்சலோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாப்டர் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிக்கூடங்களில் உள்ள 11 தேர்வு மையங்களில் காலை, மாலையில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 3080 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுக்குரிய பணிகளை மேற்கொள்ள துணை தாசில்தார் நிலையில் 5 சுற்று குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வீடியோ பதிவு செய்ய 12 வீடியோ கிராபர்கள், தேர்வை கண்காணிக்க 11 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு மின்சார வசதி, கூடுதல் பஸ் வசதி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவை போட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.