வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆகாஷ் 595 மதிப்பெண்ணும், ஹரி பிரகாஷ் 591 மதிப்பெண்ணும், ஜெய உருமன் 587 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
மேலும் தேர்வு எழுதிய 163 மாணவர்களில், 27 மாணவர்கள் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் ரகுபதி சுப்ரமணியன், தலைவர் தேனாள் சுப்ரமணியன், பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் சுப்ரமணியன், சீனிவாசன், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சம்மை, முதல்வர் சிராஜூதீன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.
Related Tags :
Next Story