நீச்சல் போட்டியில் யாதவா கல்லூரி அணி சாம்பியன்
காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில் யாதவா கல்லூரி அணி சாம்பியன் நடந்தது.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்கள் பிரிவில் 60 புள்ளிகள் பெற்று யாதவா கல்லூரி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 59 புள்ளிகளுடன் அமெரிக்கன் கல்லூரி அணி 2-ம் இடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் லேடிடோக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், தமிழ்நாடு நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ், உடற்கல்வி இயக்குனர்கள் அமெரிக்கன் கல்லூரி பாலகிருஷ்ணன், லேடிடோக் கல்லூரி சாந்தமீனா, யாதவா கல்லூரி நெல்சன், மதுரை கல்லூரி கதிரேசன், விருதுநகர் செந்தில்குமார் கல்லூரி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.போட்டி ஏற்பாடுகளை நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.