ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருப்பத்தூரில் இருந்து இயக்க வேண்டும்


ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருப்பத்தூரில் இருந்து இயக்க வேண்டும்
x

ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை திருப்பத்தூரில் இருந்து இயக்க வேண்டும் என தென்னக பொது மேலாளரிடம் நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ெரயில்வே நிலையத்த்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

அதில் திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளது. அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் கேரளா, மும்பை பகுதிகளில் இருந்து திருப்பத்தூருக்கு வருகிறார்கள். அதேபோன்று திருப்பத்தூரில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்கிறார்கள். ஆகையால் மாவட்ட தலைநகரான திருப்பத்தூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது ஜோலார்பேட்டையில் இருந்து இயங்கி வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ெரயிலை திருப்பத்தூர் ெரயில் நிலையத்திலிருந்து காலை மற்றும் இரவு நேரங்களில் இயக்க வேண்டும். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் , சென்னை- ஜோலார்பேட்டை ரெயில், கோவை டபுள் ெடக்கர் உள்ளிட்ட ரெயில்கள் திருப்பத்தூரில் நின்று செல்ல வேண்டும். மேலும் சாய்வுதள நடைபாதை, நகரும் படிக்கட்டு அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட பொது மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story