"யோகம் பயில்வதே உலக அமைதிக்கான வழி"


யோகம் பயில்வதே உலக அமைதிக்கான வழி
x
திருப்பூர்


யோகம் பயில்வதே உலக அமைதிக்கான வழி என்று திருமூர்த்திமலையில் நடந்த விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

தவ வேள்வி

தென்கயிலாயம் என்று அழைக்கக்கூடிய திருமூர்த்தி மலையில் உள்ள பரஞ்சோதி ஆசிரமத்தில் 33-வது பிரபஞ்ச மகாதவ வேள்வி கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம கூட்டாட்சி அனைத்தும் முழுமையாக நிறைவு பெற வலியுறுத்தி குருமகான், பிரமிடு வடிவிலான பிராணவாலயத்தில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வியை மேற்கொண்டார். வேள்வியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச் செயலாளர் சுந்தரராமன் வரவேற்றுப் பேசினார். சென்னை சில்க்ஸ் இயக்குனர் விநாயகம் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

இயற்கையோடு வாழ்க்கை

இந்து மதம் 2 முக்கிய போதனைகளை அளித்துள்ளது. ஒன்று அனைவரையும் ஏற்றுக்கொள்ளுதல். மற்றொன்று எல்லா மக்களையும் ஏற்றுக்கொள்ளுதல். உலகத்தில் ஓரிடத்தில் நடைபெறும் தவறால் மற்றொரு இடத்தில் உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

ரஷ்யா-உக்ரைன் போரால் உலக மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். உரத்தின் விலை 95 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா அமைதியையே விரும்புகிறது.

பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளுக்கு மத்தியில் அமைதியை நிலை நாட்டுவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ஐ.நா. சபையில் பேசிய பிரதமர் மோடி யோகாவை கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். அப்போது இருந்து 7 வருடங்களாக ஜூன் 21-ந்தேதி உலக யோகா தினம் 192 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

உலக அமைதிக்கா"யோகம் பயில்வதே உலக அமைதிக்கான வழி""யோகம் பயில்வதே உலக அமைதிக்கான வழி"ன வழி

நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது உலக மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் ஒரு மனிதன் மாற வேண்டும். மனிதன் மாறும் போது வீடு மாறும், கிராமம் மாறும், சமுதாயம் மாறும், நாடும் மாறும், நாடு மாறும் போது உலகமே மாறுபடுமென்று தெரிவித்தார். உலகில் அமைதி இல்லை என்றால் தனி மனிதனுக்கு அமைதி கிடைக்காது. எனவே அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். யோகம் பயில்வதே உலக அமைதிக்கான வழியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் முடிவில் குரு மகான் அருளாசி வழங்கினார். உடுமலை பகுதிக்கு வருகை தந்த அண்ணாமலையை பா.ஜ.க.வினர் திரண்டு வந்து வரவேற்றனர்.


Next Story