பள்ளி மாணவர்களுக்கு யோகா போட்டி
கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு யோகா போட்டி நடத்தப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான யோகா போட்டி நடைபெற்றது. போட்டியில் 30 பள்ளிகளில் இருந்து 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகன், பகத்சிங் ரத்ததான கழகம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கினார்.
விழாவில் அரசு சித்த மருத்துவர் திருமுருகன், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.