வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம் கொண்டாட்டம்


வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம் கொண்டாட்டம்
x

வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். துணைத்தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலை வகித்தார். யோகா ஒருங்கிணைப்பாளர் கிரிராஜ் சிங் ரத்தோடு வரவேற்றார். தொடர்ந்து வாழும் கலை பயிற்சி மையத்தை சேர்ந்த சாத்வி ஜோதிஸ்வரூபிணி யோகா செய்முறை விளக்கம் அளித்தார். துறைமுகம் அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். துறைமுகத்தின் இழுவை கப்பலிலும் ஊழியர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.


Next Story