பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகா சாதனை


பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகா சாதனை
x

ஓசூரில் பள்ளி மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு யோகா சாதனை படைத்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அன்னை நகர் பகுதியில் இயங்கி வரும் யோகா பள்ளி மாணவர்கள் 17 பேர் பொதுமக்களிடம் கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக 27 யோகாசனங்களை செய்து நோபல் உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டனர். பச்சி மோத்ஆசனா, சேது பந்தாசனா, வஜ்ராசனம், திரிகோ ஆசனம் உள்ளிட்ட 27 ஆசனங்களை மாணவர்கள் தொடர்ச்சியாக செய்தனர். சென்னையை சேர்ந்த கவுரி தேவி தலைமையிலான நோபல் உலக சாதனை நடுவர் குழுவினர், மாணவர்களின் யோகா சாதனைக்கு நடுவர்களாக இருந்தனர். சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அனைவருக்கும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில் மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story