கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி


கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் இயற்கை மருத்துவ பிரிவில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

தர்மபுரி

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் இயற்கை மருத்துவ பிரிவில் கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான பிரசவத்திற்கு சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இயற்கை மருத்துவ பிரிவு

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதேபோல் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பிரிவிற்கு சிகிச்சை பெற வந்து செல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இங்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாய பவுடர் வழங்கப்படுகிறது. மேலும் நுரையீரல் மசாஜ், நீராவி மூலிகை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இது குறித்து உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறியதாவது:-

கர்ப்பிணிகளுக்கு பயிற்சி

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவில் ரத்த அழுத்தம், சர்க்கரை, வாதம், கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகிய நோய்களுக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்கு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான பிரசவத்திற்கு சிறப்பு யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதேபோல் பல்வேறு நோய்களுக்கு மண் சிகிச்சை, நீராவி சிகிச்சை, மூலிகை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு இயற்கை மருத்துவ சிகிச்சைகள் இங்கு பணி புரியும் பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவில் அனைத்து சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இயற்கை மருத்துவம் குறித்து இப்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியுள்ளது. இந்த இயற்கை மருத்துவ பிரிவிற்கு பல்வேறு சிகிச்சைகள் பெற ஒரு நாளில் சராசரியாக 120 பேர் வந்து செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story