யோகா பயிற்சி


யோகா பயிற்சி
x

யோகா பயிற்சி நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே குந்தாணிபாளையத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியர் சரஸ்வதி, சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் குந்தாணிபாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.


Next Story