பள்ளி மாணவர்கள் யோகா நிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்து காட்டினர்
தென்காசி
சிவகிரி:
சிவகிரி நகர பா.ஜ.க. சார்பில், சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்திஜி கலையரங்கம் முன் உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரணா யோகா பயிற்சி பள்ளி மாணவர்களின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சியாளர் அருண்குமார் தலைமையில் மாணவர்கள் யோகாசனம் செய்து காட்டினர்.
சிவகிரி பா.ஜ.க. நகர தலைவர் ஒருசொல்வாசகன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதேவநல்லூர் ஒன்றிய துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோதண்டராமன், தென்காசி மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு திறன்) கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் கருப்பையா, குமார், ராமராஜ், புலியூரான், பரமசிவன், ராஜேந்திரன், சக்திவேல், ரவி, பேச்சியப்பன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story