யோகா நிகழ்ச்சி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் உலக யோகா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ''உடல்நலத்தையும் மனநலத்தையும் இணைக்கும் பாலமாக யோகாசனம் விளங்குகிறது. வளமான வாழ்க்கை வாழ யோகசானம் அவசியம்'' என்று கூறினார்.
ம.தி.தா. இந்து கல்லூரி முதல்வரும், உலக சமுதாய சேவா சங்க நெல்லை மண்டல துணைத்தலைவருமான சுப்பிரமணியன் வாழ்த்தி பேசினார். சேவா சங்க துணைத்தலைவர் லீலாவதி யோகாசன பயிற்சி அளித்தார். பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்தனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக விளையாட்டு துறைத்தலைவர் ஆறுமுகம் செய்திருந்தார்.
Related Tags :
Next Story