அரசு பெண்கள் கல்லூரியில் யோகா பயிற்சி


அரசு பெண்கள் கல்லூரியில் யோகா பயிற்சி
x
தினத்தந்தி 24 May 2022 5:30 PM GMT (Updated: 2022-05-24T20:44:55+05:30)

காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் யோகா பயிற்சி நடந்தது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடந்தது. யோகா பயிற்சிக்கு கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சுமதி கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தார். மேலும் யோகா செய்வதன் அவசியம், பயன்கள் மற்றும் பெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள் குறித்தும் விரிவாக விளக்கி கூறினார். இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார் செய்த இருந்தார். மாணவி காவியா நன்றி கூறினார்.


Next Story