தினமும் யோகா செய்வதன் மூலம் கோபம் குறையும்
தினமும் யோகா செய்வதன் மூலம் கோபம் குறையும் என்று தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி கூறினார்.
தினமும் யோகா செய்வதன் மூலம் கோபம் குறையும் என்று தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி கூறினார்.
யோகா தின விழா
தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் உலக யோகா தின விழா நேற்று நடைபெற்றது. விழாவில் குடந்தை மண்டல துணைத்தலைவர் புருசோத்தமன் வரவேற்றார். விழாவில் தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவதுயோகா தினமும் செய்வதன் மூலம் முகம் புதுப்பொலிவுடன் காணப்படும். தெய்வீககளை ஏற்படும். கோபமும் குறையும். இங்கு பெண்கள் அதிக அளவில் வந்துள்ளீர்கள். பெரும்பாலும் பெண்கள், அதிக அளவில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். அவர்களுக்கு அமைதியை தருவது யோகா தான்.
மன நிம்மதி தரும்
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் பரபரப்பாக ஓடுகிறார்கள். அந்த நிலையில் தேவை மன நிம்மதி. அதனை தருவது யோகா தான். நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெற்றோருக்கு உண்டு. நமது பண்பாடு, கலாசாரத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சிறுநீரகத்துறை முன்னாள் பேராசிரியர் டாக்டர் மோகன்தாஸ், டாக்டர் இளங்கோ, உலக சமுதாய சேவா சங்க இணை இயக்குனர் தெய்வசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து யோகா பயிற்சி செய்முறை நடைபெற்றது.முடிவில் நிர்வாக அறங்காவலர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.